News Date: 26th Oct, 17
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் '2.0'. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றதால், விளம்பரப்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது படக்குழு. இதன் முதற்கட்டமாக துபாயில் நாளை (அக்.27) பிரம்மாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
முன்னதாக துபாயில் படக்குழு இன்று (வியாழக்கிழமை) பத்திரிகையாளர்களை சந்தித்தது. இச்சந்திப்பில் ரஜினி, அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன், இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் கலந்து கொண்டனர்.
பத்திரிகையாளர்கள் மத்தியில் ரஜினி பேசியதாவது:
கடவுளின் கருணையாலும் மக்களின் அன்பாலும்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். '2.0' படத்தில் என்னை நடிக்க வைத்த தயாரிப்பாளர் சுபாஷ்கரன் மற்றும் இயக்குநர் ஷங்கருக்கு நன்றி.
பெருமைமிக்க இந்தப் படத்தின் ஒரு பங்காக நான் இருப்பதில் மகிழ்ச்சி. இது நிச்சயம் பெருமைக்குரிய, பெரிய பட்ஜெட் படமாக இருக்கும். '2.0' வெளியான பிறகு இந்தியர்கள் மட்டுமின்றி அயல் நாட்டினரும் படத்தைக் கொண்டாடுவர்.
இவ்வாறு அவர் பேசினார்.
அக்ஷய்குமார் பேசியதாவது:
''இந்தப் படத்தில் நான் வில்லனாக நடித்திருக்கிறேன். ஆனாலும் ரஜினி சாரின் நடிப்பு அதை மிஞ்சிவிட்டது. இது முற்றிலும் எனக்கு வித்தியாசமான அனுபவம். ஷங்கர் ஓர் இயக்குநராக மட்டும் அல்லாமல் அறிவியலாளராகவும் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.
படத்தில் யாராலும் நம்பவே முடியாத விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. ஒப்பந்தத்தின் காரணமாக இதற்கு மேல் படத்தின் கதை குறித்து என்னால் எதுவும் கூற இயலாது''
இவ்வாறு அவர் பேசினார்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆன்டனி
Karthik Subbaraj’s ‘Mercury’ releasing tomorrow in Tamil Nadu
“வரும் வெள்ளிக்கிழமை நாளை முதல் புதுப்படங்கள் ரிலீஸ்
Chiyaan Vikram’s Dhruva Natchathiram Latest Updates
தமிழ் சினிமாத்துறையின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வருகிறது
Keerthy Suresh brings back Savitri on-screen ‘Nadigaiyar Thilagam’
“தயவுசெய்து திருட்டு விசிடியில் படம் பார்க்காதீர்கள்” - பிரபுதேவா வேண்டுகோள்
வரலட்சுமி நடிக்கும் அடுத்த தலைப்பு 'வெல்வெட் நகரம்'
TFPC joins hands with another digital service provider K Sera Sera Limited
எமி ஜாக்சன் நடித்த கேரக்டரில் நடிக்கிறார் கேத்ரின் தெரேசா
சினிமா தயாரிப்பாளர்கள் உண்மையிலே மாபெரும் தியாகிகள் தான் - ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா
Bala’s ‘Naachiyaar’ successfully crossed its 50th day
உதயநிதி ஸ்டாலினுக்கு அப்பாவாக நடிக்கிறார் கார்த்திக்
தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் வைத்துள்ள கோரிக்கைகள்
Latest updates of ‘Kadai Kutty Singam' Karthi’s role
உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பட்டம் கொடுத்த சீனு ராமசாமி
ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தின் செய்தி
விஷாலுக்கு ஜோடியாகும் தெலுங்கு நடிகை ராஷி கண்ணா