tweak Own Production Audio Launch Blu-ray Ayngaran TV MP3 Songs Online Store tweak
   

“ஹவுஸ் ஓனர்” படம் பற்றி இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்

 “ஹவுஸ் ஓனர்” படம் பற்றி இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்

News Date: 16th Mar, 19

“ஆரோகனம்” மற்றும் அம்மணி  ஆகிய படங்களின் மூலம் எல்லாத்தரப்பு மக்களின் பாராட்டையும் பெற்ற லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கி வரும் “ஹவுஸ் ஒனர்” சமிபத்தில் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.“ வார்த்தைகளே இல்லை, நான் மிகமிக மதிக்கும் சிலர் என் படத்தை பார்த்து என்னை பாராட்டுவது மனதை நிறைய வைக்கிறது. உள்ளதை உள்ளபடி செல்லும் உள்ளங்களை மட்டும் தான், நான் இத்தகைய பிரத்தியேக காட்சிகளுக்கு அழைப்பேன். அவர்களிடம் இருந்து எனக்கு கிடைத்த பாராட்டும் மரியாதையும் அளவிட முடியாது.

‘ஆடுகளம்’ கிஷோர் இந்தப் படத்தில் மிரட்டியிருக்கிறார். பிரபல நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர் நடிப்பை பார்த்தவுடன், நடிப்புப் கூட பரம்பரை சொத்துதான் என கருத்து தோன்றும். எனது தோழி விஜயலக்ஷ்மியும் அவளது சகோதரி சரிதாவும் லவ்லினுடைய திறமையை எண்ணி பெருமைப்படலாம். ‘பசங்க’ திரைப்படத்தின் மூலமாக தேசியவிருது பெற்றவரும், ‘கோலிசோடா’ படத்தில் மிக பிரமாண்டமாக நடித்திருந்த கிஷோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாம் சராசரி வாழ்வில் சந்திக்கும் ஒரு அம்மாவை ஶ்ரீரஞ்சனி பிரதிபலித்திருக்கிறார். தரமான நல்ல கதைகள் திறமையான நடிகர்களை தானே தேடிக்கொள்ளும் என்பதில் எனக்கு இங்கேதான் நம்பிக்கை பிறக்கிறது.

இசையமைப்பாளர் ஜிப்ரான் போன்ற கலைஞனுடன் இந்தப் படத்தில் பணியாற்றியதில் பெருமிதம் கொள்கிறேன். மதன் கார்க்கி மற்றும் அனுராதா பாடல் வரிகளை இயற்றியுள்ளார். பாடல்களுக்கு உயிருட்டும் விதமாக சின்மயி, சத்யபிரகாஷ் மற்றும் பென்னி தயாள் பாடியுள்ளனர். ‘மகளிர் மட்டும்’ புகழ் பிரேம் சிறந்த முறையில் எடிட்டிங் செய்துள்ளார். கிருஷ்ண சேகர் ஒளிப்பதிவாளராகவும், தபஸ் நாயக் ஆடியோகிராபியும் கையாண்டுள்ளனர்.

இப்படத்தை கோடையில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். கதைகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன, அந்த வரிசையில் இந்தப்படமும் வெற்றிபெறும் என நம்புகிறேன்” என்று பெருமையுடன் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கூறுகிறார்.

More News

   


Join us on Facebook Watch us on Youtube
Play AYNGARAN RADIO
Latest Update @ www.ayngaran.com
   

Ayngaran Sites

   

   

Latest News

2nd May, 19

 Jyothika and Revathy’s starring ‘Jackpot’ First Look Poster

 எஸ்.ஜே.சூர்யாவின் ‘மான்ஸ்டர்’ படத்தின் அறிவிப்பு

30th Apr, 19

 Suriya's Much Awaited 'NGK' Trailer released

 விஜய் சேதுபதி - ஸ்ருதிஹாசன் நடிக்கும் 'லாபம்' படப்பிடிப்பு

29th Apr, 19

 Prabhu Deva - Tamannaah starrer Devi 2 release date

 கார்த்தி - ஜோதிகா இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு

26th Apr, 19

 Suriya's 'NGK' Movie Audio & Trailer release date

 ஜாவா தீவில் சூர்யா நடிக்கும் 'காப்பான்' படப்பிடிப்பு

 Nayanthara joined for Superstar Rajinikanth’s ‘Darbar’

25th Apr, 19

 Suriya’s ‘Kaappaan’ Movie latest updates

 விஜய் ஆண்டனி, அர்ஜுன் இணைந்து மிரட்டும் ‘கொலைகாரன்’ டிரைலர்

 Nayanthara's 'Kolayuthir Kaalam' Movie Censored

16th Apr, 19

 Arulnithi’s K13 Movie gets U/A certificate

 10 வருடங்களுக்குப் பிறகு இளையராஜா இசையில் பாடிய கே.ஜே.ஜேசுதாஸ்

15th Apr, 19

 சூர்யா & கே.வி.ஆனந்த் கூட்டணியில் 'காப்பான்' வெளியீட்டு தேதி

 Suriya’s "Kaappaan" will hit screens on August 30

 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' முதல் பார்வை வெளியீடு

12th Apr, 19

 'சலீம்' இயக்குநர் நிர்மல் குமார் இயக்கும் புதிய படத்தில் சசிகுமார்

 Adventure Movie ‘Thumbaa’ shoot wrapped up

 100 மில்லியன் சாதனை படைத்த மெர்சல் வீடியோ

More